Sunday, 20 November 2016

பொம்மைகள்+குழந்தைகள்+அம்மாக்கள்=கடவுள்


பொம்மைகள்+குழந்தைகள்+அம்மாக்கள்=கடவுள் - கவிஞர் தில்பாரதி
குழந்தை கவிதைகள் - 64 பக்கங்கள்
ரூ.60


தினத்தந்தி - வரப்பெற்றோம் பகுதியில்...





பதிப்புரை

கவிஞர் தில்பாரதி அவர்கள் எழுதிய “பொம்மைகள் + குழந்தைகள் + அம்மாக்கள் = கடவுள்” என்கிற இனிமையான நூலினை தட்டச்சு செய்கிற பணியும், ஒவ்வொரு கவிதைக்கும் கச்சிதமாகப் பொருந்துகிற பேசும் படங்களைத் தேர்வு செய்கிற பணியும் எனக்கு கிடைத்தது வரம் என்றே கருதுகிறேன். மனநிம்மதி தரும் இப்பேர்பட்ட நூல்களையே காகிதம் பதிப்பகம் உருவாக்க விரும்புகிறது. பிரார்த்தனைகள் மூலம் கடவுளை நேசிக்கும் போது மனஅமைதி தோன்றுமே. அதுபோன்று, பொம்மைகள், குழந்தைகள், அம்மாக்களின் கூட்டு உருவமான கடவுளை பார்த்து ரசிக்கும் போதும் மனஅமைதி தோன்றுமே. இந்தக் கூட்டணிக்கு அமைதிக்கான நோபல் பரிசிற்கும் மேலான ஓர் விருதைக் கொடுக்கலாம். பொம்மைகளின் மௌன மொழிகள் குழந்தைகளுக்கு மட்டுமே புரிகின்றன. குழந்தைகளின் மழலை மொழிகள் பொம்மைகளுக்கு மட்டுமே புரிகின்றன. ஆனால், யாருக்கும் புரியாத இவர்கள் இருவரின் அதிசய மொழிகள் கடவுளுக்கு மட்டுமே புரிகின்றன. பொம்மைகள் இல்லாத குழந்தைகளை அம்மாக்கள் சமாதானம் செய்வார்கள். ஆனால், அம்மாக்கள் இல்லாத குழந்தைகளை பொம்மைகளால் மட்டுமே சமாதானம் செய்ய முடியும்.  பொம்மையை எப்படி தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்பதை தன்னைத் தூக்கிக் கொஞ்சும் அம்மா மூலமே கற்றுக்கொள்கிறது குழந்தை. மனதின் பாரம் இறக்க, குழந்தைகளைத் தூக்கிப் பிடியுங்கள். மனதில் மகிழ்ச்சி சுரக்க, கவிஞர் தில்பாரதி அவர்களின் இந்நூலினை தூக்கிப் படியுங்கள்.

நட்புடன்,
மனோபாரதி,

காகிதம் பதிப்பகத்தார்

இந்நூலைப் பெற
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள்
அல்லது

தவறிய அழைப்பு விடுங்கள்...

No comments:

Post a Comment