Monday, 21 November 2016

நூல்கள்


மாற்றுத்திறன் எழுத்தாளர்களின் நூல்கள்...
மாற்றுத்திறன் நண்பர்கள் வடிவமைத்த நூல்கள்...

Sunday, 20 November 2016

புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல் - கவிஞர் புதியவன் ராஜா


புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல் - கவிஞர் புதியவன் ராஜா
கவிதை - 78 பக்கங்கள்
ரூ.70

பதிப்புரை

       கவிஞர் புதியவன் ராஜா அவர்கள் “புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல்” நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்பை எங்களிடம் வழங்கியமைக்கு மகிழ்கிறேன். கவிஞர் அவர்களின் உயிரோட்ட எழுத்துக்கள் என்னும் மூச்சால், காதலும் கற்பனையும் கலந்த சுருதியோடு வாசிக்கும், பேனா என்னும் புல்லாங்குழலின் துளைகள் வழியே, கவிதை என்னும் இசையாய் உருவெடுத்து, வாசகர் நெஞ்சங்களுள் அழகியல் அம்சங்களோடு ஊடுருவி மென்மையாய் சங்கமிக்கின்றன. மூங்கிலில் இருந்து தான் காகிதப் புத்தகம் உருவாக்கப்படுகிறது. மூங்கிலில் இருந்து தான் புல்லாங்குழல் உருவாக்கப்படுகிறது. அவ்வகையில், இப்புத்தகத்தின் கவிதைகளைத் தாங்கும் ஒவ்வொரு காகிதமும், இசையின் இனிமை சூடிய வார்த்தைகளின் கவித்துவத்தால், புல்லாங்குழலாக மனக்கண்களுக்கு கவினிய மாயக்காட்சி தருகிறது. கவிதைகளின் சில இடங்களில், நம்மை காதல் சிகரம் ஏறத் தூண்டுகிறது. சில இடங்களில் கற்பனை வான மேகங்களில் மெல்ல மிதக்க வைக்கிறது. இதுவரை, புல்லாங்குழல் என்றால் கிருஷணர் உருவமும் மூங்கிலுமே ஞாபகத்திற்கு வந்தன. இனி, கவிஞர் புதியவன் ராஜா அவர்களும், இந்தப் புத்தகமுமே ஞாபகத்திற்கு வரும். பசுமை மூங்கிலில் வண்டுகள் துளையிட, அதில் தென்றல் புகுந்து இசையாக மாறிட, இயற்கையாய் உருவான இசைக்கருவியாம் புல்லாங்குழல். அவ்வகையில், ”புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல்”-இன் வார்த்தைகளும் பசுமையும் இயற்கையும் வாய்ந்தவை.

மனோபாரதி,

காகிதம் பதிப்பகத்தார்


இந்நூலைப் பெற 
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு 
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள் 
அல்லது 
தவறிய அழைப்பு விடுங்கள்...

புத்தகத்தில் புலம்புகிறேன்



புத்தகத்தில் புலம்புகிறேன் - கவிஞர் புதியவன் ராஜா
கவிதை - 80 பக்கங்கள்
ரூ.75


பதிப்புரை

      கவிஞர் புதியவன் ராஜா அவர்கள், “புத்தகத்தில் புலம்புகிறேன்” கவிதை நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்பை எங்களிடம் வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கவிஞர் அவர்களின் படைப்பை நூலாக உருவாக்கம் செய்யும் போது, ஒவ்வொரு வரிகளும் என்னுள்ளே பல உணர்வுகள் புலம்பல்களாய் உருவெடுத்தன. நிறைய கேள்விகள் கேட்க வைத்தன. சமூக அவலம், ஆதங்கம், ஏக்கம், கோபம், அக்கறை என்று அர்த்தங்களுடன் புலம்பியிருக்கிறார். வாழ்வின் முக்கிய அத்தியாயங்களில் காலடி வைக்கவிருக்கும் இளைஞர்களை, இந்நூல் ஒருமுகப்படுத்தும். இப்படைப்பு வெறும் புலம்பல்களால் ஆனதல்ல. வாழ்க்கைப் பிரச்சனைகளின் அடுத்தக் கட்டமான தீர்வுகள் நோக்கியும் நம்மை நகர்த்துகிறது. எல்லா கவிதைகளுக்கேற்ப கச்சிதமான பேசும் படங்களை இணைத்திருப்பது, புலம்பல்களை நமக்கு நன்றாகப் புரியவைக்கின்றன. வாழ்க்கையில் இயல்பாகவே புலம்பல்கள் இருக்க, சிலர் எளிதில் தீர்வு கண்டிட, சிலரோ தவிப்பார்கள். அவர்கள், இந்நூலைப் படிக்கலாம். ஏனென்றால், கவிஞர் புதியவன் ராஜா அவர்களின் புலம்பல்கள் மிகத் தெளிவானவை.

மனோபாரதி,

காகிதம் பதிப்பகத்தார்

இந்நூலைப் பெற 
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு 
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள் 
அல்லது 
தவறிய அழைப்பு விடுங்கள்...

கவிஞன் வருகிறான்...! எழுந்து நில்லுங்கள்...!



கவிஞன் வருகிறான்...! எழுந்து நில்லுங்கள்...! - கவிஞர் ரௌத்திரன்
கவிதை - 140 பக்கங்கள்
ரூ.80

நாடிநரம் பத்தனையும்
ஓடிவிளை யாடுதமிழ்
கூடிவரச் செய்யுமடி நாட்டை -இவன்
புகழ்பாடி நிரப்புமடி ஏட்டை!

சூழ்நிலைதான் என்செய்யும்?
சூழ்வினைதான் என்செய்யும்?
ஊழ்வினையும் ஒதுங்குமடி கண்டு -அந்த
வலிமையிவன் தமிழுக்கே உண்டு!

விழுதுவிடத் தமிழ்விருட்ஷம்
எழுதிவிட வந்தவன்காண்
புழுதிபட மறைந்திடாத கவிஞன் -இவன்
புதிய பாரதிகளின் தலைவன்! 

            -ரௌத்திரன்

இந்நூலைப் பெற 
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு 
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள் 
அல்லது 

தவறிய அழைப்பு விடுங்கள்...

இதயத்தில் இன்னொரு இதயம்




இதயத்தில் இன்னொரு இதயம் - பாடலாசிரியர் பண்டரி நாதன்
கவிதை - 30 பக்கங்கள்
ரூ.25

இந்நூலைப் பெற 
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு 
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள் 
அல்லது 

தவறிய அழைப்பு விடுங்கள்...

விருட்சமாகும் சிறு விதை



விருட்சமாகும் சிறு விதை - கவிஞர் வீரபாண்டி என்கிற விஜி
கவிதை - 64 பக்கங்கள்
ரூ.64


பதிப்புரை

       கவிஞர் விஜி அவர்கள் ”விருட்சமாகும் சிறு விதை” கவிதை நூலை, தன் உடன்பிறவா சகோதரி Dr.மௌலா தேவி அவர்களின் ஆதரவினால் பதிப்பிக்கும் வாய்ப்பினை எங்களுக்கு வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளி கவிஞர் அவர்கள் விடாமுயற்சியாலும், அசராத மனதாலும் தன் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள தீராத தடைகளை உடைத்தெறிந்து, இக்கவிதை நூலினை வெளியிட முன்வந்ததற்கு மாற்றுத்திறனாளிகள் நடத்துகிற காகிதம் பதிப்பகம் ஆதரவான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இயல்பான மனிதர்கள் மத்தியில் இவர் “வேறு மாதிரி”. இளைஞர்களுக்கு இவர் ”முன்மாதிரி”. மனதில் தோன்றும் தன்னம்பிக்கை கவிதைகளால், இவர் வாழ்க்கையில் சிந்திய கண்ணீரில் எதிர்நீச்சல் போடுகிறார். தன் வீரிய வரிகளால் சமூகத்தை சாடுகிறார். ஆதங்கம், வலிகள், ஏக்கம், ஆசை ஆகிய உள்ளார்ந்த உணர்வுகளை வார்த்தைகளால் வார்த்தெடுத்து, மனஅமைதியை தேடுகிறார். தன் எண்ண ஓட்டங்களில் தேடிப்பிடித்த சொற்களால் சொக்கவைத்து, மக்களின் மன ஓட்டங்களில் நிமிர்ந்து ஓடுகிறார். சிற்றூர் மண் மணம் வீசுகிற பேச்சு வழக்கு வட்டார வார்த்தைகள் அத்தனையும், நம் நெஞ்சங்களில் சிலிர்க்க வைக்கிறது. அவை நகர வாழ் மக்களை ஏங்க வைக்கும். தன் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்குப் பயணிக்க, இக்கவிதை நூலின் மூலம் உத்வேகமாக, தன் காலடியை எடுத்து வைத்திருக்கும் கவிஞர் அவர்களுக்கு, என்றும் முன்னேற்றப் பாதையிலே சுமூகமாக செல்ல, நாம் அனைவரும் நட்பார்ந்த ஆதரவினை வழங்குவோம். கவிஞர் விஜி அவர்களின் கவிதை என்னும் சிறு விதை, வாசக இதயங்களில் பல எண்ணக் கிளைகளை பரந்து விரிக்கும் விருட்சமாக உருவாகும். இது நிச்சயம்.

மனோபாரதி,

காகிதம் பதிப்பகம்

இந்நூலைப் பெற 
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு 
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள் 
அல்லது 
தவறிய அழைப்பு விடுங்கள்...

மாயத்தடி


மாயத்தடி - கவிஞர் சாத்துக்கூடல் கா.இளையராஜா
கவிதை - 64 பக்கங்கள்
ரூ.60

பதிப்புரை

                கவிஞர் சாத்துக்கூடல் கா.இளையராஜா அவர்களின் ”மாயத்தடி” கவிதைத் தொகுப்பிற்கு, நாங்கள் நூல் வடிவப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டதன் மூலம், இனிமையான அனுபவங்களைப் பெற்றோம். பல முன்னணி இதழ்களில் வெளிவந்த கவிஞரின் ஒவ்வொரு கவிதைக்கும், கச்சிதமாய் ஒரு படத்தை பொருத்துவது, எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஒரு படத்திற்குப் பொருத்தமான கவிதை உருவாக்குவதற்கு கவியிலக்கிய அறிவாற்றல் முக்கியம். அதே போன்று, ஒரு கவிதைக்குப் பொருத்தமான படத்தை உருவாக்குவதற்கும், இலக்கிய அறிவுடன் கூடிய கடின உழைப்பு அவசியம். எல்லா கவிதைகளுக்கும் முழுமையாகப் பொருந்துகிற வகையில், கொஞ்சமும் அர்த்தம் பிசகாமல், கவிநயம் கூடிய படங்களை சூடியுள்ளோம் என்று கூறிக்கொள்வதன் மூலம், நாங்கள் இந்நூலுக்காக உழைத்ததில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறோம். மாயத்தடியை எழுதுகோல் வடிவில் ஏந்தியிருக்கிற கவிஞர் அவர்கள், மனிதம், சமூகம், அரசியல், வாழ்வியல் அர்த்தங்கள் ஆகியவற்றை அவலம், ஏழ்மை, கண்ணீர், ஆறுதல் என்று பேசி நம் மனதை சூடேற்றி, கனமாக்கியது மட்டுமல்லாது, ஆங்காங்கே மழலை கொஞ்சியும், காதல் பேசியும் நம் மனதை இறகாய் இலகுவாக்க தவறவில்லை. வாசக நெஞ்சங்களே... சமூக அவலங்களை சாட கவிஞரின் “மாயத்தடி”யைப் படியுங்கள். புரட்சித் தீ மனதுள் மூண்டிட, அரக்கர்களை இந்த “மாயத்தடி”யின் வீரியமுள்ள வாசகங்களால் அடியுங்கள். மேடு பள்ளமுள்ள வாழ்க்கைச் சாலையிலே பயணிக்க தடுமாறினால், நெஞ்சை நிமிர்த்தி நேராக நடக்க கவிஞர் சாத்துக்கூடல் கா.இளையராஜா அவர்களின் “மாயத்தடி”யை பிடியுங்கள்.

மனோபாரதி,

காகிதம் பதிப்பகத்தார்

இந்நூலைப் பெற 
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு 
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள் 
அல்லது 
தவறிய அழைப்பு விடுங்கள்...