Sunday, 20 November 2016

புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல் - கவிஞர் புதியவன் ராஜா


புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல் - கவிஞர் புதியவன் ராஜா
கவிதை - 78 பக்கங்கள்
ரூ.70

பதிப்புரை

       கவிஞர் புதியவன் ராஜா அவர்கள் “புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல்” நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்பை எங்களிடம் வழங்கியமைக்கு மகிழ்கிறேன். கவிஞர் அவர்களின் உயிரோட்ட எழுத்துக்கள் என்னும் மூச்சால், காதலும் கற்பனையும் கலந்த சுருதியோடு வாசிக்கும், பேனா என்னும் புல்லாங்குழலின் துளைகள் வழியே, கவிதை என்னும் இசையாய் உருவெடுத்து, வாசகர் நெஞ்சங்களுள் அழகியல் அம்சங்களோடு ஊடுருவி மென்மையாய் சங்கமிக்கின்றன. மூங்கிலில் இருந்து தான் காகிதப் புத்தகம் உருவாக்கப்படுகிறது. மூங்கிலில் இருந்து தான் புல்லாங்குழல் உருவாக்கப்படுகிறது. அவ்வகையில், இப்புத்தகத்தின் கவிதைகளைத் தாங்கும் ஒவ்வொரு காகிதமும், இசையின் இனிமை சூடிய வார்த்தைகளின் கவித்துவத்தால், புல்லாங்குழலாக மனக்கண்களுக்கு கவினிய மாயக்காட்சி தருகிறது. கவிதைகளின் சில இடங்களில், நம்மை காதல் சிகரம் ஏறத் தூண்டுகிறது. சில இடங்களில் கற்பனை வான மேகங்களில் மெல்ல மிதக்க வைக்கிறது. இதுவரை, புல்லாங்குழல் என்றால் கிருஷணர் உருவமும் மூங்கிலுமே ஞாபகத்திற்கு வந்தன. இனி, கவிஞர் புதியவன் ராஜா அவர்களும், இந்தப் புத்தகமுமே ஞாபகத்திற்கு வரும். பசுமை மூங்கிலில் வண்டுகள் துளையிட, அதில் தென்றல் புகுந்து இசையாக மாறிட, இயற்கையாய் உருவான இசைக்கருவியாம் புல்லாங்குழல். அவ்வகையில், ”புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல்”-இன் வார்த்தைகளும் பசுமையும் இயற்கையும் வாய்ந்தவை.

மனோபாரதி,

காகிதம் பதிப்பகத்தார்


இந்நூலைப் பெற 
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு 
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள் 
அல்லது 
தவறிய அழைப்பு விடுங்கள்...

No comments:

Post a Comment