ஹைக்கூ கவிதைகள் - 64 பக்கங்கள்
ரூ.60
பதிப்புரை
“தண்ணீர் அஞ்சலி” ஹைக்கூ கவிதைகள் நூலினை
பதிப்பிக்கும் வாய்ப்பினை எங்களுக்கு வழங்கிய கவிஞர் தில்பாரதி அவர்களுக்கு நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன். மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்று சொல்வதை
ஏற்க முடியாது. இந்த அவசர உலகில், மக்களின் மனம் அறிந்து, சூழ்நிலை உணர்ந்து, அவர்களுக்கு
விருப்பமான நூல்களை பதிப்பகத்தார்கள் படைத்து கொடுத்தால், வாசிப்புப் பழக்கம் அவர்களிடையே
வளர்ந்து வரும். அவ்வகையில், கவிதையின் ஒரு வகை வடிவமான “ஹைக்கூ”வால் எழுதப்பட்ட இந்நூலைப்
பதிப்பித்ததற்கு நான் தனித்துவமான மகிழ்வினை அடைகிறேன். மூன்றடிகளில் உலகம் அளந்த வாமனர்
போல், ஹைக்கூவின் மூன்றடிகளில் உலக நடப்புகளை அளக்கிறார், கவிஞர்
அவர்கள். மகாகவி பாரதி அவர்களின் ”கூ... கூ” குயில் பாட்டு இனிமையினை, இந்நூலின் ஹைக்கூவிலும் உணரலாம். ”கூ... கூ...” எனக் கூவி
காலையில் நம்மை விழிக்கச் செய்யும் குயில் குக்கூ போல, கவிஞரின் “தண்ணீர் அஞ்சலி” ”ஹைக்கூ”வும்
நம் மனக்கண்களை விழிக்கச் செய்யும்.
இப்படிக்கு,
மனோபாரதி,
காகிதம் பதிப்பகத்தார்
இந்நூலைப் பெற
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள்
அல்லது
தவறிய அழைப்பு விடுங்கள்...

No comments:
Post a Comment