Sunday, 20 November 2016

அறிமுகம்


காகிதம் பதிப்பகம்

2015ஆம் ஆண்டு
மகாகவி பாரதியார் அவர்களின் 
பிறந்த நாளான டிசம்பர் மாதம் 11ஆம் நாளன்று
காகிதம் பதிப்பகம் தொடங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நடத்துகிற
தமிழ் நூல்கள் பதிப்பிக்கும் நிறுவனம்.

தோள்கள் கொடுக்கும்
நூல்கள் படிப்போம்.

கீழ்காணும் பணிகளில் காகிதம் பதிப்பகம் ஈடுபடும்...
-அச்சுக்கான நூல் வடிவம்
-நூல் அட்டைப் பட வடிவம்
-நூல் அச்சு
-ISBN எண் பதிவு
-நூல் விளம்பரம்
-நூல் விற்பனை
-புத்தகக் கண்காட்சி பங்கேற்பு

நூல் அச்சிடுவதற்கு ரூ.15000, ரூ.20000. ரூ.30000 என்று பெரும் தொகையை செலவு செய்ய முடியாத, 500 அல்லது 1000 போன்ற அதிகளவிலான எண்ணிக்கையில் நூல்களை அச்சிட்டு, விற்பனை செய்ய முடியாத திறமையான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக காகிதம் பதிப்பகம் வழிகாட்டுகிறது. புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட அச்சக இயந்திரம் மூலம் குறைந்தபட்சம் 100 நூல்களை அச்சிடலாம். 100 நூல்களை விற்ற பின் அடுத்த 100 நூல்களை அச்சிடலாம். இவ்வகையிலான அச்சிடும் முறையில் நூல்களை அச்சிட்டு, திறமையான இளம் எழுத்தாளர்கள், வறுமையில் வாடும் புலமை கொண்ட எழுத்தாளர்கள் பயன்பெறுமாறு காகிதம் பதிப்பகம் நட்புடன் கேட்டுக்கொள்கிறது.

http://pathippagam.blogspot.in/2016/11/print.html

எழுத்தாளர்களின் படைப்புகளை 
அச்சு நூல் வடிவமாக 
காகிதம் பதிப்பகம் 
சிறந்த முறையில் 
பதிப்பித்து வழங்கும் என்று 
உறுதியளிக்கிறது.

3 comments:

  1. காகிதம் பதிப்பக நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் முயற்சியில் வெற்றிகள் பல கண்டு மேலான நிலைக்கு வர என் வாழ்த்துக்கள்.
    அன்புடன் பாலு( பாலசுப்பிரமணி) சென்னை

    ReplyDelete
  2. காகிதம் பதிப்பக நண்பர்களுக்கு வணக்கம்

    உங்கள் பதிப்பக பணி இரண்டு ஆண்டுகளான நடைபெற்று வருகிறது.
    ஆனால் நான் அண்மையில் தான் இதனை அறிந்தேன்.
    உங்களின் இந்த அற்புத முயற்சிக்கு என் இதய வாழ்த்துக்கள்.
    மாற்றுத் திறனாளிகள் நடத்தும் பதிப்பகம் என்று பார்த்தேன்.
    இதயத்தில் ஒரு பெரும் மகிழ்ச்சி.
    உங்களின் இந்த வானளாவிய முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.

    உங்கள் பாதங்கள்
    குறுகிய சந்துகளில்
    நடை பழகினாலும்
    உங்கள் எண்ணங்கள்
    விலாசமான பாதையில்
    உலாவரட்டும். . .

    நிறைய நிறைய வாழ்த்துக்கள்
    நன்றி

    நிறைய ப்ரியங்களுடன்
    அன்பன்
    கவிஞர்.கவி மோகன்
    99 65 76 62 63

    ReplyDelete
  3. கவிஞர்.கவி மோகன்

    காகிதம் பதிப்பக நண்பர்களுக்கு வணக்கம்

    உங்கள் பதிப்பக பணி இரண்டு ஆண்டுகளான நடைபெற்று வருகிறது.
    ஆனால் நான் அண்மையில் தான் இதனை அறிந்தேன்.
    உங்களின் இந்த அற்புத முயற்சிக்கு என் இதய வாழ்த்துக்கள்.
    மாற்றுத் திறனாளிகள் நடத்தும் பதிப்பகம் என்று பார்த்தேன்.
    இதயத்தில் ஒரு பெரும் மகிழ்ச்சி.
    உங்களின் இந்த வானளாவிய முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.

    உங்கள் பாதங்கள்
    குறுகிய சந்துகளில்
    நடை பழகினாலும்
    உங்கள் எண்ணங்கள்
    விலாசமான பாதையில்
    உலாவரட்டும். . .

    நிறைய நிறைய வாழ்த்துக்கள்
    நன்றி

    நிறைய ப்ரியங்களுடன்
    அன்பன்
    கவிஞர்.கவி மோகன்
    99 65 76 62 63
    anbankavimohan@gmail.com

    ReplyDelete