கவிதை - 80 பக்கங்கள்
ரூ.75
என்னுரை
“கையில் என் புத்தகம் வைத்து, மனதால் என் வரிகளை வாசித்து கொண்டு இருக்கும் அன்பு வாசகர்களுக்கு என் வணக்கங்கள். குழந்தைப்பருவம் விளையாட்டிலும்,
பள்ளிப்பருவம் படிப்பிலும் முக்கியத்துவம் தருவதாக அமைந்ததற்கு
இடையில், அவ்வப்போது சில புத்தகங்களின்
வரிகள்
என் கண்ணில் பட்டன, அதையும்
தாண்டி நெஞ்சத்தையும் தொட்டன. அடுத்து நான் படிக்கச்சென்ற ஆசிரியர் பட்டயப்படிப்பு காலம் தான், என்னை கிறுக்கச்சொல்லி கொடுத்தது. கவிதைகளை எழுதக் கற்றுத் தந்தது.
அன்று முதல் கவிதை எழுத ஆரம்பித்தேன். இயல்பாக கண்ணில் படும்,
கண்ணை உறுத்தும் காட்சிகளை கவிதைகளாகவே புனைகிறேன். கவிதை என்னும் நீண்ட பயணத்தில் நான், என் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன் என்பதில் மனமகிழ்கிறேன். பல வகையான எழுத்து எனும் பூக்களைப் பறித்து, வார்த்தை எனும் நூல் கொண்டு சொற்களை அதில் கோர்த்து மணம்
வீசும் மாலையாக்கி உங்கள் கைகளில் கொடுத்துள்ளேன்.
இது என் முதல் கவிதை மாலை.
கண்டிப்பாக இதை படித்துக் குறைகளைச் சொல்லுங்கள் குறைத்துக்கொள்கிறேன். நிறைகளை சொல்லுங்கள் மேலும் என்னை ஒப்பனை செய்து கொள்கிறேன்.
பாசமிகு பந்தத்துடன்,
பண்டரி நாதன்,
இந்நூலைப் பெற
8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு
பெயர் மற்றும் முழு முகவரி அனுப்புங்கள்
அல்லது
தவறிய அழைப்பு விடுங்கள்...
சில கவிதைகள்...
காணொளி
படங்கள்












No comments:
Post a Comment